இந்தியா, மார்ச் 21 -- இரவில் உறக்கம் வராமல் சிலர் தவிக்கிறார்கள். பல்வேறு பிரச்னைகளால் ஏற்படும் மனஅழுத்தம், நோய்கள் என பலருக்கும் இரவு உறக்கம் வராமல் இருப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் உள்ளன. அதற்காக அவர்கள் சில முயற்சிகளை எடுப்பார்கள். ஆனால் அதைச் செய்யும்போதும், அவர்களுக்கு உறக்கம் வராமல் இருக்கும்.

இரவில் உறங்கச் செல்லும் முன் நீங்கள் சில விஷயங்களைச் செய்யவேண்டும் என்று இயற்கை பாரம்பரிய மருத்துவர் ராசா ஈசன் கூறியிருப்பது என்ன? இரவில் உறக்கம் வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் குறிபிட்டுள்ள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. உறங்கச் செல்லும் முன் இரண்டு டம்ளர் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீர் ஒரு டம்ளராக வற்றிய ப...