இந்தியா, ஏப்ரல் 5 -- கோவையைச் சேர்ந்த சித்த மருத்துவர் உஷா நந்தினி தனது சமூக வலைதளப் பக்கங்களில் சித்த மருத்துவக் குறிப்புக்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இவர் புதுயுகம் டிவிக்கு அளித்தபேட்டியில் எப்போது பழங்கள் சாப்பிடவேண்டும் என்று தெரிவித்துள்ளார். நாம் இப்போது சாப்பிட்டவுடன் பழங்கள் அல்லது பழங்கள் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை சாப்பிடுகிறோம். ஆனால் அது நமது பாரம்பரிய பழக்கம் கிடையாது. அதை செய்வதால் நமது உடலில் என்ன நடக்கிறது என்று மருத்துவர் உஷா நந்தினி கூறுகிறார்.

இதுகுறித்து மருத்துவர் உஷா நந்தினி கூறியதாவது

நாம் சாப்பிட்டவுடனே பழங்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் இரவு உணவை சாப்பிட்டுவிட்டு உடனே பழத்தை சாப்பிடுவார்கள். அதுபோல் செய்யக்கூடாது. இரவு உணவுக்கோ அல்லது எந்த உணவுக்குப்பின்னரும் ஃப்ருட் சாலட் அல்லது ஃப்ரூட்...