இந்தியா, ஏப்ரல் 27 -- உங்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள நீங்கள் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். மன ஆரோக்கியமே முழு உடல் ஆரோக்கியம் என்பதை மனதில் கொள்ளவேண்டும். நாம் பலவீனமாக இருந்தால், அடுத்தவர்கள் எளிதாக நம் மனதில் காயங்களை ஏற்படுத்திவிட்டுச் சென்று விடுவார்கள். எனவே நீங்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.

நீங்கள்தான் உங்களின் பாதுகாவலராக இருக்கவேண்டும். உங்களின் நிலை என்னவென்று பாருங்கள். உங்களுக்கு நீங்கள் உதவி செய்ய உறுதிகொள்ளுங்கள். உங்களைப் பற்றி முழுவதும் உங்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

நீங்கள் உடற்பயிற்சி, நல்ல உணவு, நல்ல உறக்கம் போன்ற முக்கியமான விஷயங்களை விட்டுவிடாதீர்கள். அவை உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானது. அவற்றை செய்ய முடியவில்லையென்ற...