New Delhi, மார்ச் 11 -- பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராக இருப்பதே அவர்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்படுவது உண்டு. ஆனால் மன அழுத்தத்தின் காரணமாக மாதவிடாய் சுழற்சி தாமதிக்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம் இது உணர்ச்சி சமூக, உடல் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களினால் நிகழலாம். ஆனால் எல்லா மன அழுத்தங்களும் எதிர்மறையானது அல்ல. இது குறித்து ஐவிஎப் ஆலோசகர் மற்றும் மருத்துவர் பிரியங்கா ராணி எச்டி லைப் ஸ்டைலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, "உங்கள் உடற்பயிற்சியின் தீவிரம் மற்றும் கால அளவு அதிகரிப்பது போன்ற குறுகிய கால மன அழுத்தங்கள் நம் ஆரோக்கியத்தில் சாதகமான விளைவு ஏற்படுத்தும். மன அழுத்தம் க...