இந்தியா, மார்ச் 14 -- 'மனைவிக்கு ஜீவனாம்சம் தருவதை தவிர்ப்பதற்காக தகுதி இருந்தும் வேலையை விட்டுவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒரு நல்ல தகுதி வாய்ந்த கணவனை நாகரிக சமுதாயத்தில் பாராட்ட முடியாது' என்று ஒரிசா உயர் நீதிமன்றம் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. பிரிந்து சென்ற தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.15,000 இடைக்கால ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து வேலையில்லாத பொறியாளர் ஒருவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஒரிசா உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒரு பள்ளி ஆசிரியர், மற்றும் அவர்களின் குழந்தைக்கு ஜீவனாம்சத்தை தர வேண்டும் என கூறியது.

"வேலை கிடைக்காமல் இருப்பது என்பது ஒரு விஷயமாக ஏற்கலாம். ஆனால், சம்பாதிப்பதற்கான தகுதியும் வாய்ப்பும் கொண்டு இருந்துவிட்டு சும்மா உட்கார்ந்திருப்பது வேறு விஷயம், ஒரு கணவன் சம்பாதிக்கும் அளவுக்கு தக...