இந்தியா, பிப்ரவரி 21 -- இந்த வருடம் நமது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கப்போகிறது. அடுத்த வருடம் உங்கள் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கப்போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ஆம் ஆண்டு தொடக்க விழா ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், உயிரே, உறவே, தமிழே வணக்கம் என்று சொல்கிறேன். நான் வாழ்வில் உணர்ந்த உண்மையை பேசும் வார்த்தைகள் அவை. எனது சிந்தனையும், எனது கலையும் தன்னம்பிக்கை உடன் உயிர்த்து இருப்பதற்கு தமிழக மக்களே காரணம். சில உறவுகள் 10 ஆண்டுகள் தாங்கும், சில உறவுகள் 2 நாட்களில் முறிந்துவிடும். நண்பன் என்று சொல்லி வருபவன், எதிரி ஆகிவிடுவான். இதை நான் 50 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். எனது தாய், தந்தை, சகோதர சகோதரிகளுக்கு பிறகு...