இந்தியா, ஏப்ரல் 18 -- மது அருந்துவதால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளின் எண்ணிக்கை குறைவல்ல. உண்மையில், நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்கும் சக்தி மதுவுக்கு உண்டு. அதனால்தான் மது அருந்துவதை நிறுத்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மது அருந்துபவர்களுக்கு எவ்வகையான ஆரோக்கியப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை இங்கே கொடுத்துள்ளோம்.

நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளான கல்லீரல், இதயம், மூளை உள்ளிட்ட அனைத்தும் மது அருந்துவதால் பாதிக்கப்படும். இவை தவிர செரிமான மண்டல நோய்களையும் ஏற்படுத்துகிறது. மனநலப் பிரச்னைகளான மனச்சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கும் இது காரணமாகிறது. மதுவை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் நோய்களின் பட்டியலை அறிந்தால், நீங்கள் அதை அருந்துவதற்கே பயப்படுவீர்கள்.

கல்லீரலில் கொழுப்பு தேங்குவதால் இந்த நோய் ஏற்படுகிறது....