இந்தியா, மே 5 -- கார் விபத்து மூலம் தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாக மதுரை ஆதீனம், குற்றம்சாட்டிய விவகாரத்தில், காவல்துறையின் விளக்கத்திற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்த கார் விபத்து தொடர்பாக காவல்துறை அளித்த அறிக்கை முன்னுக்குப் பின் முரணாகவும், ஒரு தரப்புக்கு சார்பாகவும் உள்ளதாக ஆதீனம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

கடந்த மே 2ஆம் தேதி, மதுரை ஆதீனம் மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் பயணித்தபோது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சேலம் ரவுண்டானா பகுதியில் அவரது கார் மீது மற்றொரு வாகனம் மோதியது. இதனைத் தொடர்ந்து, மே 3ஆம் தேதி சென்னை காட்டாங்குளத்தூரில் நட...