இந்தியா, மே 5 -- மதுரை ஆதீனம் கொலை முயற்சி புகாரில் திடீர் திருப்பமாக அவரது கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

கடந்த மே 2 அன்று, மதுரை ஆதீனம் மதுரையிலிருந்து சென்னைக்கு காரில் பயணித்தார். பயணத்தின்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள சேலம் ரவுண்டானா பகுதியில், சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு கார் ஆதீனத்தின் காரின் பின்புறம் மோதியது. இந்த விபத்து ஆதீனத்தின் கார் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதால் ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மே 3 அன்று, சென்னை காட்டாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம், உளுந்தூர்பேட்டையில் தனது காரை மற்றொரு வ...