இந்தியா, பிப்ரவரி 13 -- Maruthakasi : மெட்டுக்கு மிக விரைவில் பாடல் எழுதும் ஆற்றல் பெற்றவர் மருதகாசி. தன் காலத்தில் அதிகமான படங்களுக்கு முழு பாடல்களையும் எழுதியவர். தமிழ் திரை உலகில் 4000 பாடல்களுக்கு மேல் எழுதிய மருதகாசி பிறந்தநாளான இன்று அவர் குறித்த சில முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம். மருதகாசி திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலக்குடிகாடு என்னும் கிராமத்தில் 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி அய்யம்பெருமாள் உடையார்- மிளகாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

உள்ளூர் தொடக்க பள்ளியில் கல்வி பயின்றார். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் சேர்த்து உயர் கல்வி பயின்றார். இவர் 1940ம் ஆண்டு தனக்கோடி என்ற பெண் மணந்தார். இந்த தம்பதிக்கு 6 மகன்கள் 3 மகள்கள் பிறந்தனர். 1949 ஆம் ஆண்டு வெளிவந்த மாயாவதி படத்தின் மூலம் திரைப்பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆனார் ம...