இந்தியா, மே 10 -- மட்டன் சுக்கா என்றாலே மணப்பட்டி ஸ்பெஷல் மட்டன் சுக்காதான் சிறந்தது. அவர்களின் சுவையை வேறு யாராலும் கொண்டுவர முடியாது. மதுரையில் நீங்கள் எந்த விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும், பெரும்பாலும் மணப்பட்டி சமையல்தான் மணக்கும். அவர்களின் சிறப்பு மட்டன் சுக்காவை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* மட்டன் - ஒரு கிலோ

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

* இஞ்சி - ஒரு இன்சி (இடித்து சேர்த்துக்கொள்ளவேண்டும்)

(ஒரு குக்கரில் மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் இடித்த இஞ்சி சேர்த்துக்கொள்ளவேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துவிட்டு, 10 விசில் விட்டு கறியை நன்றாக வேகவைத்துக்கொள்ளவேண்டும்.

* நெய் - ஒரு குழிக்கரண்டி

* சின்ன வெங்காயம் - ஒரு கப்

* முந்திரி பருப...