இந்தியா, ஜூன் 13 -- மலையாளத்தில் தற்போது ஏகப்பட்ட த்ரில்லர் ஜானர் திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதில் பலவை மக்களிடம் நல்ல வரவேற்பும் பெறுகின்றன. அந்த வரிசையில் கடந்த மாதம் மே 23ம் தேதி வெளியான திரைப்படம்தான் ஆசாதி. இந்தப்படத்தின் ஓடிடி அப்டேட் தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது.

ஆசாதி திரைப்படம் ஜூன் 27 அன்று மனோரமா மேக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட இருக்கிறது. இந்தப்படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே அந்த ஓடிடி தளம் படத்தை வாங்கி இருந்தது. மலையாளத்தில் இந்த நடைமுறை மிகவும் அரிதாகவே நடக்கும். காரணம், பெரும்பாலான மலையாள படங்கள் திரையரங்குகளில் வெளியான பிறகே டிஜிட்டல் பார்ட்னர்ஷிப்பை உறுதி செய்கின்றன. ஆனால், மனோரமா மேக்ஸ் முன்னமே ஆசாதி படத்தை வாங்கிவிட்டது. இது இந்தப்படத்தின் மீது ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது....