இந்தியா, மே 11 -- நமது உடலில் தலையில் இருந்து கால் பாதங்கள் வரையில் சதைப் பாகத்தை மூடியிருக்கும் மேல் தோலில் அமைந்துள்ள சிறிய புள்ளிகள் தான் மச்சங்கள் என அழைக்கப்படுகிறது. இது கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம் , சாம்பல், வெளுப்பு போன்ற ஏதாவது ஒரு நிறத்திலோ அல்லது பல நிறத்திலோ இருக்கலாம். அது போல இதன் அளவுகள் கூட வேறுபடலாம். ஒருவருக்கு சிறிய அளவில் இருக்கும் மற்றொருவருக்கு பெரிய அளவில் இருக்கும். இந்த மச்சங்களின் நிறங்களை வைத்து கூட என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று மச்ச சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மச்ச சாஸ்திர தகவல்கள் படி, நமது உடலில் உள்ள மச்சங்களின் நிறங்களை பொறுத்து என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

மச்சம் அடர் கறுப்பு நிறத்தில் இருந்தால் அவர்களது வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும் என்று மச்ச சாஸ்திரத்...