இந்தியா, ஏப்ரல் 13 -- நாம் வீட்டில் தோசை செய்வதற்கு பொதுவாக உளுந்து மற்றும் அரிசியை ஊறவைத்து, அரைத்து, இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து புளிக்கவைத்துதான் தோசை செய்வோம். ஆனால் உங்கள் தோசையின் சுவையை நீங்கள் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மசூர் தாலை பயன்படுத்தலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்களும், புரதச்சத்துக்களும் அடங்கியுள்ளது. தென்னிந்தியாவில் பரவலாக செய்யப்படும் உணவான தோசையில் நீங்கள் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த மசூர் தால் தோசையை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* பச்சரிசி - ஒரு கப்

* மசூர் தால் - 2 கப் (மசூர் தால் என்பது கேசரி பருப்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது. பருப்பைப்போலவே இருக்கும். ஆனால் இதன் நிறம் அழகிய ஆரஞ்சாக இருக்கும்)

* எண்ணெய் - தேவையான அளவு

* உப்பு - தேவையான அளவு ...