இந்தியா, மார்ச் 2 -- வழக்கமாக தேங்காய் சாதம் சாப்பிட்டு இருப்பீர்கள். தேங்காயை கடுகு, உளுந்து, கடலை, கடலை பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வதக்கி அதை பொலபொலவென வடித்து, ஆறவைத்து அதில் சேர்த்து கிளறியிருப்பீர்கள். ஆனால் இது மசாலா தேங்காய் சாதம். இதை உங்கள் குழந்தைகள் அல்லது நீங்களே என யார் லன்ச் பாக்ஸில் வைத்து பள்ளி அல்லது ஆபிஸ் என எடுத்துச்சென்றால் மற்றவர்களுடன் ஷேர் செய்து விடாதீர்கள். அவர்கள் லன்ச் பாக்ஸை திருப்பித் தரமாட்டார்கள். சாப்பிட்டுக்கொண்டேயிருப்பார்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும். வழக்கமாக என்ன செய்து வைத்தாலும் லன்ச் பாக்ஸில் மிச்சம் வைக்கும் குழந்தைகள் கூட இதை சுத்தமாக ஒரு பருக்கை கூட இல்லாமல் காலி செய்து கொண்டு வருவார்கள். அத்தனை சுவையானதுதான் இந்த மசாலா தேங்காய் சாதம். இதற்கு தொட்டுக்கொள்ள என்று நீங்கள் தனியாக எதுவும் ...