இந்தியா, ஏப்ரல் 5 -- இந்த ஒரு பொடியை மட்டும் நீங்கள் அரைத்து வைத்துக்கொண்டால் போதும். இதை சாம்பார், காரக்குழம்பு மற்றும் பொரியல் என அனைத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாகவே சரியான மசாலாக்கள் கையில் இருந்துவிட்டால் சமையல் மிகவும் எளிது. சமைப்பதற்கு தேவையான பக்குவம் இருந்துவிட்டால் அனைவருமே மாஸ்டர் செஃப்தான். உங்கள் சமையலின் ருசியை அதிகரிக்க ஒரு மசாலாப் பொருள். இதை நீங்கள் அனைத்து வகை குழம்பு மற்றும் பொரியலுக்கும் பயன்படுத்தலாம். இந்த அளவில் செய்து வைத்துக்கொண்டால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். எனவே ஒரு நாள் முயற்சித்து செய்துவிட்டால், தினமும் சமையலில் தெறிக்கவிடலாம். அப்படி சுவையான மசாலாப் பொடி என்னவென்று பார்க்கலாமா?

* வரமிளகாய் - 200 கிராம்

* குண்டு மிளகாய் - 200 கிராம்

* கஷ்மீரி மிளகாய் - 100 கிராம்

* வரமல்லி - 500 கிராம்...