இந்தியா, ஏப்ரல் 19 -- மங்களூர் ஸ்பெஷல் மஸ்ரூம் நெய் ரோஸ்டில் நீங்கள் சுவைக்காக என தனியாக எதுவும் சேர்க்கத் தேவையில்லை. வீட்டில் உள்ள மசாலாப் பொருட்களை வைத்தே சுவையான மங்களூர் ஸ்பெஷல் மஸ்ரூம் நெய் ரோஸ்ட் செய்துவிடலாம். சூப்பரான சுவை கொண்டதாக இந்த மஸ்ரூம் நெய் ரோஸ்ட் இருக்கும். இதை செய்வது எப்படி என்று பாருங்கள்.

* வர மல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1 ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* சோம்பு - ஒரு ஸ்பூன்

* மிளகு - ஒரு ஸ்பூன்

* கசகசா - ஒரு ஸ்ழுன்

(வரமல்லி, சீரகம், வெந்தயம், சோம்பு, மிளகு என அனைத்தையும் ஒரு கடாயில் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். மசாலாக்கள் வறுபட்டவுடன், கசகசாவை சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுப்பை அணைத்துவிடவேண்டும். அந்த சூட்டிலே கசகசா வறுபட்டுவிடும். கசகசாவையும் முன்னரே சேர்த்தால் அது தீய்ந்து...