இந்தியா, மார்ச் 29 -- ஆரோக்கியம் நிறைந்த கலோரிகள் குறைவான ஒரு ஸ்னாக்ஸாக மக்கானா உள்ளது. இதில் புரதச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது செரிமானத்துக்கு நல்லது. இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் இயக்கத்துக்கும் ஏற்றது. இது குளுட்டன் இல்லாதது மற்றும் எண்ணற்ற வகைகளில் சாப்பிட ஏற்றது. இதை மாலை நேர ஸ்னாக்ஸாக்கலாம். மிகவும் சிறந்தது.

மக்கானாவில் ஃப்ளாவனாய்ட்கள் உள்ளன. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. வீக்கத்தை குறைக்கிறது மற்றும் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. இளம் வயதிலேயே வயோதிகம் ஏற்படுவதைத் தடுக்கிறது.

மக்கானாவில் தாவர அடிப்படையிலான புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது தசைகளை சரிசெய்ய உதவுகிறது. ஆற்றலைக் கொடுக்கிறது. உங்களின் பசியை நீண்ட நேரம் கட்டுப்படுத்துகிறது. எனவே இதை மாலை நேர ...