இந்தியா, ஜூலை 9 -- திமுக கட்சி இல்லை, கார்ப்பரேட் கம்பெனி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார்.

'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு உண்மையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், ஆட்சிக்கு வருவதற்காகவே தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை கடுமையாக விமர்சித்தார். "திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆன பிறகும் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. இப்போது தேர்தல் நெருங்குவதால், மேலும் 30 லட்சம் பய...