இந்தியா, ஜூன் 13 -- உங்கள் உடலே ஒரு மருந்தகம்தான். அதற்கு தேவையான மருந்துகளை அதுவே தயாரித்துக்கொள்ளும். நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நேரத்தில் உங்கள் உடலுக்கு தேவையான மகிழ்ச்சி ஹார்மோன்களை அது அதிகளவில் சுரக்கிறது. இந்த இயற்கை வேதிப்பொருட்கள், உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். இந்த மகிழ்ச்சி ஹார்மோன்கள் உங்கள் உடலில் சுரப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அன்றாடம் நீங்கள் செய்யும் சிறிய நடவடிக்கைகளின் மூலமே அவற்றை நீங்கள் செய்ய முடியும்.

உங்களின் மூளை குட் ஜாப் அதாவது நல்ல வேலை என்று கூறுவதை போன்றது டோப்பமைன், இது நீங்கள் ஒரு இலக்கை எட்டிப்பிடிக்கும்போது சுரக்கிறது. ஒரு விஷயத்தை செய்து முடிக்கும்போது அல்லது உங்களுக்கு பிடித்த உணவை சாப்பிடும்போது ஏற்படுகிறது. எனவே சிறு வெற்றிகளைக் கூட கொண்...