இந்தியா, பிப்ரவரி 21 -- Maha Shivaratri 2025: சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக மகா சிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மகா சிவராத்திரி திருநாளில் பல விசேஷ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புராணங்களில் கூறப்படுகின்றன. சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இந்த நாளில்தான் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சிவராத்திரி திருநாளில் சிவபெருமானின் நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், வேண்டும் வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்த வருகிறது.

ஜோதிடர் சாஸ்திரத்தின் படி மகா சிவராத்திரி திருநாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அன்று மகாசிவராத்திரி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் கும்ப ராசியில் உதயமாக உள்ளார்.

மகாசிவராத்திரி திருநாள...