இந்தியா, பிப்ரவரி 26 -- Maha Shivaratri 2025: கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு மிகப்பெரிய விசேஷ நாளாக கருதப்படுவது மகா சிவராத்திரி திருநாள். இந்த திருநாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரையும் வழிபட்டால் அருள் கிடைக்கும் கூறப்படுகிறது. இந்த திருநாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது வழக்கமாகும்.

சிவபெருமான் லிங்க திருமேனியாக காட்சி கொடுத்த திருநாளாக இந்த சிவராத்திரி திருநாள் விளங்கி வருகிறது. அதன் காரணமாக இந்த திருநாளில் லிங்க வழிபாடு செய்வது மிகவும் உன்னத பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மகா சிவராத்திரி திருநாள் இந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவடைகின்றது.

பிப்ரவரி 26 ஆம் தேதி புதன்கிழமை சதுர்தசி திதி காலை 11:08 மணிக்கு...