இந்தியா, பிப்ரவரி 26 -- தமிழ் காலண்டர் 26.02.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், புதன்கிழமையான இன்று (பிப்ரவரி 26) புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாகும். எனவே இந்தநாளின் வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை.

மேலும், இன்றைய தினம் இந்துக்களின் முக்கிய பண்டிகையான மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள் அதிகாலை நீராடி வீட்டில் உள்ள சிவன் படத்தையோ அல்லது சிவலிங்கத்தையோ அலங்காரம் செய்து பூஜை செய்யதால் சக நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் இன்று பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகுகாலம...