இந்தியா, பிப்ரவரி 26 -- மகா சிவராத்திரி பிரசாதம்: மகா சிவராத்திரி என்றால், சிவன் கோயிலில் நான்கு கால பூஜைகள் நடக்கும். நீங்க எல்லாருமே கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த 4 கால பூஜைக்கும் 4 விதவிதமாக பிரசாதங்கள் செய்வார்கள். முக்கியமான பிரசாதங்கள் மட்டும் என்னென்ன என பார்ப்போம்.

இந்த பிரசாதங்களில் ஏதாவது ஒரு சிலவற்றை தயார் செய்து சிவனுக்கு படைத்து விட்டு அவரை வணங்கி பிறகு அதை நாம் அந்த பிரசாதத்தை உட்கொண்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

ஒரு கப் பச்சரிசி அரை கப் பாசிப் பருப்பு போட்டு 1:4 ரேஷியோல அரிசிக்கு 4 கப் பருப்புக்கு தனியாக ஒரு ரெண்டு கப் அளவுக்கு தண்ணி விட்டு இதை வேக விடுங்க. பிறகு உப்பு ஒரு முக்கால் டீஸ்பூன் கிட்ட போடவும். இப்போது அதை நன்கு கொதிக்க விடுங்க.

பின்னர் அதை எடுத்து வைத்துவிட்டு அடுப்பில் ஒரு ...