இந்தியா, பிப்ரவரி 26 -- பழமையான மர வழிபாடு பின் கல் தூணாக கந்து வழிபாடானது, பின்னர் லிங்க வழிபாடாக மாறியதாக தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் நடந்த 'உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை கல்லூரி முதல்வர் ரா.இந்திரா தொடங்கி வைத்தார். வரலாற்றுத்துறைத் தலைவர் க.வெண்ணிலா அனைவரையும் வரவேற்றார்.

சிவகங்கை, அரசு மகளிர் கலைக் கல்லூரி, வரலாற்றுத் துறை சார்பில் நடந்த 'உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம்

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் பா.கந்தசாமி சிறப்பு விரு...