இந்தியா, பிப்ரவரி 24 -- Mahashivratri: கடவுள்களுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருபவர் சிவபெருமான். திரும்பும் திசையெல்லாம் நமது நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு மிக சிறந்த உகந்த நாளாக விளங்கக்கூடியது மகாசிவராத்திரி திருநாள்.

அப்படிப்பட்ட மகா சிவராத்திரி திருநாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபாடு செய்தால் நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. பல சிறப்புகளை இந்த மகா சிவராத்திரி திருநாள் கொண்டிருக்கின்றன. இதே மகா சிவராத்திரி திருநாளில் தான் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மிகப்பெரிய சுப நாளாக மகா சிவராத்திரி திருநாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

நவகிரகங்களில...