இந்தியா, பிப்ரவரி 22 -- Mahashivaratri: சிவபெருமானின் அருளை வேண்டி வழிபாடு செய்யக்கூடிய மிக முக்கிய நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகின்றது. கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்துவரும் சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்றாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வருகிறது. இந்த திருநாளில் சிவபெருமானை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த 2025 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி திருநாள் வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது ஐதீகமாகும்.

இந்த மகா சிவராத்திரி திருநாளில் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் அனைத்தும் மிகப்பெரிய பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மகா...