இந்தியா, மே 6 -- ப்ளூபெரியின் நன்மைகள், இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் உணவாகும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளையின் இயக்கம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நமது உடலுக்கு ப்ளூ பெரிகள் எத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது என்று பாருங்கள்.

ப்ளூபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அது ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பு அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது.

ப்ளூபெரிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. ஆந்தோசியானின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடல் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. செல்களை சேதமடைவதில் இருந்து காக்கிறது. ...