இந்தியா, மே 8 -- தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி நேற்று (மே 07) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகள் ஆா்த்திகா (17). இவா், அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் 2 படித்து பொதுத்தோ்வு எழுதி இருந்தார். இந்த நிலையில், இன்று காலை வெளியான பொதுத்தேர்வு முடிவுகளில் மாணவி ஆர்த்திகா 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவி ஆா்த்திகா தோ்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் சுடிதாா் துப்பட்டாவால் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந...