இந்தியா, ஏப்ரல் 28 -- ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியில் டோட்டன்ஹாமை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது லிவர்பூல் அணி.

லூயிஸ் டியாஸ் 16', அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் 24', கோடி காக்போ 34', முகமது சலா 63', டெஸ்டினி உடோகி 69' (OG) நிமிடங்களில் லிவர்பூல் அணிக்காக கோல் பதிவு செய்தனர்.

டோட்டன்ஹாம் அணிக்கா டொமினிக் 12வது நிமிடத்தில் முதல் கோலைப் பதிவு செய்தார். அதன் பிறகு அந்த அணியால் கோல் எதுவும் பதிவு செய்ய முடியவில்லை.

மேலும் படிக்க | மாட்ரிட் ஓபன் டென்னிஸ்.. முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார் நோவக் ஜோகோவிச்

போட்டி தொடங்குவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே ரசிகர்கள் மைதானத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் கொண்டாட்டத்தை எதிர்பார்த்து அணிவகுத்து நின்றனர். டொமினிக் சோலங்கேவின் ஆரம்ப கோலுக்கு பின்னால் சென்ற போதிலும், ல...