இந்தியா, மே 10 -- இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் ஒப்பந்ததை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் காஷ்மீர் ஸ்ரீ நகரில் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில் அங்கு சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. உதம்பூர் பகுதி மீண்டும் ட்ரோன்களால் தாக்கப்பட்டு இருக்கிறது.

ராஜஸ்தானின் பார்மர் நகரில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மற்றும் பட்காம் பக்கத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. பஞ்சாபின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இந்த தாக்குதல் குறித்து ஒரு மூத்த அரசு அதிகாரி இந்துஸ்தான...