இந்தியா, மே 14 -- நாட்டையே உலுக்கிய பொள்ளச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வெளியானது. குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்த நிவாரண தொகையாக ரூ.85 லட்சம் அறிவித்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் தலா ரூ.25 லட்சம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"2019 ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த மிகக்கொடுமையான குற்றசம்பவமாக கருதப்படும் இந்த வழக்கை விசாரணை செய்த கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை...