தமிழ்நாடு,சென்னை,மதுரை,கோவை,ஈரோடு,சேலம்,திருச்சி, மே 13 -- என்னை அடிக்காதீர்கள் அண்ணா.. கதறிய பெண்ணின் குரலை தமிழகம் மறந்து விட வாய்பில்லை.. ஆம் கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் அடிக்காதீங்க அண்ணா என , தன்னை வேட்டையாடிய கயவர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் அனலை கக்கியது. நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியில் வசதியான குடும்பங்களை இளைஞர்கள் கும்பல் ப...