இந்தியா, மே 19 -- இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வழக்கான பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை தற்போது நிறைவு பெற்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்ககு சாதகமாகவும் அவர்கள் சந்தித்த கொடுமைகளுக்கு பதிலாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க| 'என் சிறுவயது அவ்வளவு போராட்டமாக இருந்தது.. அம்மாவை புரிந்து கொள்ளவே பல வருஷம் ஆனது'- நடிகை லிஜிமோல் ஜோஸ்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பை அறிவித்த நிலையில், அந்த தீர்ப்புக்கு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' படத்தில் இருந்து நீக்கப்...