இந்தியா, மார்ச் 13 -- தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கை என்பது திமுக அரசின் பொருளாதார இலக்குகள் தோல்வி என்பதற்கு ஒப்புதல் வாக்குமூலம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

2025-2026ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை வெளியிடப்படுகிறது. காலை 9.30 மணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் தமிழ்நாட்டின் வளர்ச்சி அடுத்த ஓராண்டுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கம் விதமாக மாநில திட்டக் குழு தயாரித்த பொருளாதார ஆய்வறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024-25ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் எதிர்காலம் குற...