இந்தியா, ஏப்ரல் 17 -- சைவ, வைணவ சமய குறியீடுகளை உடலுறவு உடன் ஒப்பீட்டு பேசிய சம்பவத்தில், அமைச்சர் பொன்முடி பொறுப்போடு பேச வேண்டாமா? என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் பெண்கள், சைவம் மற்றும் வைணவ மதங்கள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தப் பேச்சு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழ்நாடு டிஜிபி இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அமைச்சர் க.பொன்முடி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, பெண்கள், சைவம் மற்றும் வைணவ மதங்கள் குறித்து இழிவுபடுத்தும் வகையில் கருத்துகள் தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர...