இந்தியா, மார்ச் 25 -- Lord Sani: ஜோதிட சாஸ்திரத்தின்படி நீதியின் கடவுளாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் நீண்ட காலம் பயணம் செய்யக் கூடியவர். சனி பகவானின் தாக்கம் ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் அதிகமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சனிபகவான் இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசிக்கு செல்கின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ராசியில் பயணம் செய்கின்றார்.

அஸ்தமன நிலையில் மீன ராசியில் நுழையும் சனி பகவான் வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி அன்று மீன ராசியில் உதயம...