இந்தியா, ஜூன் 2 -- முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு பதிலாக திங்கள்தோறும் பொங்கல் வழங்கப்படும்.

முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்ற பேரவை அறிவிப்பை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நலத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா போன்ற சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து வழங்க வேண்டும் என சமூகநல துற...