இந்தியா, மே 14 -- நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொள்ளாச்சி வழக்கை போல், கோடநாடு வழக்கிலும் உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அத்துடன், மோசமான பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் எடப்பாடி பழனிசாமி வேலையாக இருக்கிறது. இதுவும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் தெரிவித்தார்.

நீலகரியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, "திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியிருந்தேன். எப்படிப்பட்ட பொறுப்பில் இருந்தாலும் சரி. எவ்வளவு பெரிய செல்வாக்கு பெற்றிருந்தாலும் சரி. நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் என்று சொன்னேன். அதுதான் இப்போது நடந்திருக்...