இந்தியா, பிப்ரவரி 22 -- சென்னையை சேர்ந்த ஷோபனா நாராயணன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். '

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

மகனின் அறிவியல் தேர்வன்று, அவரை பள்ளியிட்டு விட்டு நகர முயன்றேன். காலை 9.45 க்குள் விடவேண்டும். பத்து மணிக்கு வகுப்புகளுக்குள் மாணவர்கள் சென்றுவிட வேண்டும். பத்தரைக்கு தேர்வு எழுத துவங்கவேண்டும். பத்து முதல் பத்தரை வரை ரீடிங் டைம்.

நான் மட்டுமல்ல எல்லா பெற்றோருமே பத்து மணிவரை அருகில் எங்காவது இருப்போம். திடீரென குழந்தை வெளியில் வந்து ஏதாவது கேட்குமோ என்ற சிறு பயமோ எச்சரிக்கை உணர்வோ இருக்கும். பத்து மணிக்கு கிளம்பிவிடலாம். ஆனால் அன்று நடந்த ஒரு சம்பவம் மனதை மிகவும் பாதித்தது.

ஒரு தம்பதியினர் மகனை டிராப் செய்துவிட்டு, அவன் தேர்வு எழுதும் வகுப்பு தெரிவதுபோல நின்றுகொண்டு அந்த வகுப்பைப் பார...