இந்தியா, பிப்ரவரி 24 -- டீன் ஏஜ் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு உதவக்கூடிய பழக்கவழக்கங்கள் என்னவென்று பார்க்கலாம். அவர்களுக்கு இந்த செயல்திறன்மிக்க பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் போதும். அது அவர்கள் செல்லும் பாதையில் வெற்றிக்கனிகளை எட்டிப்பறிக்க தேவையான அடித்தளத்தை அமைத்துவிடும். அவர்களுக்கு ஒழுக்கம், நேர மேலாண்மை மற்றும் தங்களை கவனித்துக்கொள்வது எப்படி என்று நீங்கள் கற்றுக்கொடுத்துவிட்டால், அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்க அது உதவும். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

காலையில் நாளை நீங்கள் துவங்கும்போது, அன்றைய நாளில் உங்களின் திறன் அதிகரிக்கும். உங்களால் அதிக வேலைகளை முடிக்க முடியும். காலையில் எழுந்து தங்களை கவனித்துக்கொண்டு, அந்த நாளுக்கான...