இந்தியா, பிப்ரவரி 28 -- எப்போது குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை அன்புடனும், மரியாதையுடனும் கற்றுக்கொடுக்கவேண்டும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது அவர்களுக்கு மரியாதையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் புரிதல் மற்றும் உணர்வு ரீதியான முதிர்ச்சியைக் கொடுக்கிறது. மென்மையாக அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கும்போது அவர்களுக்கு அது வழிகாட்டுகிறது. பொறுப்புடன் அவர்கள் நடக்க உதவுகிறது. இது பெற்றோருக்கும், குழந்தைக்கும் ஒரு நெருக்கமான உறவை வளர்க்கிறது. இதனால் அவர்களின் நடத்தை நன்முறையில் அமைய வழிவகுக்கிறது.

நேரடியான, எளிமையான விதிகளை உருவாக்கும்போது, அது அவர்களின் எல்லையை அங்கீகரிக்க உதவுகிறது. எதிர்பார்ப்புக்களை நீங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினால், அவர்களுக்கு அது ஒழுக்கத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் இது பாதுகாப்பை ஊக்கப்...