இந்தியா, பிப்ரவரி 26 -- குழந்தைகளுக்கு புதிய அனுபவங்களைப் பெறும் வழிகளை ஊக்குவியுங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கை, கிரியேட்டிவிட்டு மற்றும் மீண்டெழும் திறன் ஆகியவற்றை வளர்க்கிறது. அவர்களை தவறுகள் செய்ய அனுமதியுங்கள். அதில் இருந்து அவர்கள் கற்கவேண்டும். அது அவர்களுக்கு அவசியம். அவர்கள் வளரவும், பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், தங்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு புதிய திறன்களை கற்றுக்கொடுங்கள்.

கிரியேட்டிவாக அவர்கள் எதைச் செய்தாலும் அதை தடுக்கக்கூடாது. அவர்களை அதை தொடர்ந்து செய்ய நீங்கள் அறிவுறுத்தவேண்டும். அவர்கள் ஓவியம் தீட்டுவது, எழுவது, இசையமைப்பது என எதைச் செய்தாலும் அதை ஊக்குவியுங்கள். கிரியேட்டிவிட்டி, பிரச்னைகளை தீர்க்கும் திறனை அதிகரிக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கிறது. அவர்கள் தங்கள் உணர்வுகளை கிரியேட்டிவாகவும், அர்த்...