இந்தியா, மார்ச் 1 -- குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகவும் கவனமாக செயல்படவேண்டிய ஒன்றாகும். நீங்கள் உங்கள் குழந்தையிடம் அன்பு காட்டவேண்டும். அதே நேரத்தில் கண்டிப்புடன் இருந்து அவர்களை ஒழுங்குபடுத்தவும் வேண்டும். அவர்களுக்கு சரியான எல்லைகளையும் வகுக்கவேண்டும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அது அதிகமாகும்போது, அது பல்வேறு நடத்தை பாதிப்புக்களை எற்படுத்திவிடும். இதனால் அவர்களின் வாழ்க்கையே பாதிக்கப்படும் வாய்ப்பு கூட உண்டு. உங்கள் குழந்தைகள் நல்ல பழக்கங்களை கற்காமல் போக நீங்களே சில விஷயங்களை செய்கிறீர்கள். அது என்னவென்று பாருங்கள்.

நீங்கள் அவர்கள் விரும்பியதை வாங்கிக்கொடுக்காதபோது அல்லது அவர்கள் செய்ததை செய்யாமல் விடும்போது அவர்களுக்கு கோவம் வருகிறது என்றால், அது மிகவும் தவறான...