இந்தியா, ஏப்ரல் 16 -- திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், சக மாணவனை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க முயன்ற ஆசிரியைக்கு காயம் ஏற்பட்டது. சம்பவத்தில் ஈடுபட்ட மாணவன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். முதல்கட்ட விசாரணையில் பென்சில் தொடர்பான தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அரிவாளால் வெட்டிய மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது. வரும் 29 ஆம் தேதி வரை சீர்திருத்த குழுமத்தில் வைக்க இளஞ்சிறார் நீதி குழுமம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க | டாப் 10 தமிழ் நியூஸ்: இந்து முன்னணி நிர்வாகி ...