இந்தியா, ஏப்ரல் 20 -- காலை நேர சூரியன் என்பதில் இருந்து எடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களை இங்கு காணலாம். காலையில் எழுந்தவுடன் உங்களை மென்மையாக தழுவும் சூரியனின் கதிர்கள் எத்தனை இனிமையானதாக இருக்கும். மிருதுவான, பென்னிறமான இந்த கதிர்கள் உங்களுக்கு வாக்குறுதியைத் தரும். நல்ல நாளின் துவக்கம் என்பதைக் குறிக்கும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அமைதியான மற்றும் பளபளக்கும் ஆற்றல் நிறைந்த ஒரு பெயரைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் இந்த காலை நேர சூரியன் என்ற அர்த்தம் கொண்ட பெயர்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கு அந்த அர்தத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த காலைச் சூரியன் விடியலை உணர்த்தும். நல்ல துவக்கம் என்பதையும் சுட்டிக்காட்டும். பல்வேறு மொழிகளிலும் உள்ள பெயர்களின் அர்த்தம் காலை இளஞ்சூரியனி...