Chennai, மார்ச் 5 -- எந்தவொரு நோய் பாதிப்பாக இருந்தாலும் அனைத்து வயதினர் மீது வேறுபடாமல் இல்லாமல் தாக்குதலை ஏற்படுத்தி பாதிப்பை உள்ளாக்கும். இதில் சில நோய் பாதிப்புகள் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடும். இதற்கு பின்னணி காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு முதல் பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் இருக்கலாம்.

பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்னைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேச வேண்டும். தங்கள் உடல் மற்றும் மனப் பிரச்னைகளை பற்றி வெளிப்படையாக பேசினால் மட்டுமே அதற்கு உரிய தீர்வுகளை பெற முடியும். உடல் ரீதியாக, ஆண்களை விட பெண்கள் பலவீனமானவர்கள் என்றே கூறப்படுகிறது. இதன் விளைவாக பெண்கள் எளிதாக நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும் என கூறப...