இந்தியா, ஜனவரி 6 -- திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் எளிய சித்த மருத்துவ குறிப்புக்களை வழங்கி வருகிறார். அந்த வகையில் உங்களுக்கு பொடுகுத் தொல்லை ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி விடுபடுவது என்றும் தனது வீடியோவில் விளக்கியுள்ளார். அவர் குறிப்பிடும் எளிய முறைகளைப் பின்பற்றி நீங்கள் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம். அது என்னவென்று பாருங்கள்.

பொடுகு, வீட்டில் அனைவருக்கும் வரும். ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுகு தொற்றும் குணம் கொண்டது. எனவே பொடுகை கட்டுப்படுத்த ஒருவர் பயன்படுத்தி துண்டு, சீப்பு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. பொடுகு அதிகம் இருந்தால் அது உங்களுக்கு பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும். முடி உதிர்வை ஏற்படுத்தும். தலையில் அரிப்பு 24 மணி நேரமும் இருக்கும். இதனால் நீங்கள் வெளியில் எங...