இந்தியா, மார்ச் 13 -- பூரி பலருக்கு பிடித்த உணவாகும். உணவகங்களில் சென்று சாப்பிடும் போதும் கூட பலர் பூரி வேண்டும் என விரும்பி சாப்பிடுவார்கள். இந்தியாவின் பல வீடுகளில் பூரி ஒரு விருப்பமான சிற்றுண்டியாக இருந்து வருகிறது. இதில் பூரியுடன் உருளைக் கிழங்கு மசாலா, அசைவ குழம்பு வகைகள் என எந்த உணவுடனும் சாப்பிட பூரி நன்றாக இருக்கும். வீட்டில் பூரி செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குஷியாகி விடுவார்கள். பூரி செய்வதும் ஒரு கலை என்று சொல்லலாம். ஏனென்றால் சிலர் பூரி செய்யும்போது, ​​அது சரியாக உப்புவதில்லை. அதை சரியாக , எண்ணெயில் முழுமையாக மூழ்கும் வரை வறுக்க வேண்டும். அப்போது தான் சுவையான பூரி கிடைக்கும்.

பூரியை எண்ணெய் இல்லாமல் பொரிக்க முடியுமா என்ற கேள்வி எல்லாருக்கும் தோன்றும். சில வழிமுறைகளை பயன்படுத்தி பூரியை வறுத்தால், எண்ணெய்...