இந்தியா, மார்ச் 10 -- பொதுவாகவே தொக்கு வெரைட்டிகளை வீட்டில் செய்து வைத்துவிட்டால் நாம் அவற்றை அவசர கால பயன்பாட்டுக்கு உபயோகித்துக்கொள்ளலாம். அவற்றை சாதம் அல்லது டிஃபன் இரண்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதனால்தான் பூண்டு, தக்காளி, புதினா, மல்லி என இந்த பொருட்களில் தொக்கு செய்து வைத்துக்கொள்கிறோம். குறிப்பாக இவை மலிவாக விற்கப்படும் காலங்களில் நீங்கள் அவற்றை வாங்கி இதுபோன்ற தொக்குகளை செய்து வைத்துக்கொள்வது நல்லது. இன்று நாம் பூண்டு தொக்கு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.

* பூண்டு - 300 கிராம் (தோல் உறித்தது)

* நல்லெண்ணெய் - 50 மில்லி லிட்டர்

* கடுகு - அரை ஸ்பூன்

* புளி - எலுமிச்சை அளவு

* கல் உப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - ஒரு ஸ்பூன்

* மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்

* கருப்பட்டித் தூள் - அரை ஸ்பூன்

* பெருங்காயத் தூள் ...